பெங்களூருவில் ஆண்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆண்கள் தங்கள் உரிமைகளுக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது குடும்ப வன்கொடுமை சட்டத்தின் சில விதிகள் தங்களுக்கு எதிராக இருப்பதாக ஆண்களின் உரிமைகளுக்காக போராடும் அரசு சாரா அமைப்பு கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த சட்டத்தை திருத்த வேண்டும் என வலியுறுத்தி Save Indian Family Foundation என்ற அமைப்பு பெங்களூருவில் தற்போது உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்தில் ஏராளமான ஆண்கள் ஆண்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் போலி திருமண பலாத்காரம் மற்றும் போலி வரதட்சனை வழக்குகளில் இருந்து ஆண்களை காப்பாற்றுங்கள் எனவும் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.