உத்திரபிரதேச மாநிலத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி புதிதாக நியமிக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் என‌ 9055 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பணிநியமன ஆணையை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் உரை காணொளி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. அதில் பிரதமர் மோடி பேசியதாவது, உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு காலத்தில் மோசமான சட்ட ஒழுங்கு நிலை இருந்ததோடு மாஃபியாவுக்கு பெயர் போன மாநிலமாகவும் இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. மேலும் இன்று உத்திரபிரதேச மாநிலம் சிறப்பான சட்டம் ஒழுங்கு மற்றும் வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக இருக்கிறது என்று கூறினார்.