அமேசான் நிறுவனம் கொடுத்திருக்கும் ஆஃபரில் விலை உயர்ந்த பல்வேறு பொருட்கள் எக்கச்சக்க ஆஃபரில் கிடைக்கிறது. அமேசான் 2023 பொங்கல் ஆஃப்பரில் கிடைக்கும் போன்கள் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். 4GB RAM 64 GB ROM கொண்ட Redmi 11 Prime 5G போன் 19 சதவீத ஆஃபரில் கிடைக்கிறது. 5G சேவையில் செயல்படும் இந்த Redmi 11 Prime 5 G 15999 ரூபாயிலிருந்து 12999 ரூபாய்கு கிடைக்கிறது.

EMI ஆப்சன் கொண்ட இந்த போனை HDFC card வாயிலாக வாங்கினால் 1000 ரூபாய் மேலும் குறையும். Samsung பிராண்டில் பிரபலமான M series போன்கள் அதிகமான வாடிக்கையாளரை கவர்ந்த போனாகும். இந்த M series-ல் 5G சேவை அளிக்கும் Samsung M33 5G 32 சதவீத ஆஃபரில் கிடைக்கும்.

ரூ.24,999-க்கு விற்பனை செய்யும் Samsung M33 5G ரூ.16,999-க்கு வாங்க முடியும். இப்போது டிரெண்டிங்கில் அதிகம் வாடிக்கையாளர் தேடலில் உள்ள IQOO Z6 போன் 28 சதவீத ஆஃபரில் கிடைக்கிறது. 50 சதவீத சார்ஜ் 27 நிமிடங்களிலே ஏறிவிடும். டிஸ்பிளே, ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகிய ஆப்சன்கள் தான் IQOO பிராண்டை அதிக வாடிக்கையாளரை ஈர்த்து உள்ளது.