விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பிரியமான பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் சீரியல் பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றம் உள்ளதால் மக்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கி விட்டனர். முதல் நாளிலிருந்து பிக் பாஸ் ஆக்டிவாக போட்டியாளர்களுக்கு பல டாஸ்க் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இன்று முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் புதிதாக போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் விஷ்ணு மற்றும் மாயா இருவரும் மோதிக் கொள்கின்றனர். முதல் நாள் வாக்குவாதம் மோதல் எதுவும் இல்லாமல் சென்ற நிலையில் நேற்று இருந்து வாக்குவாதங்கள் போட்டியாளர்கள் மத்தியில் தொடங்கியுள்ளது. அதன்படி தற்போது மூன்றாவது நாளில் அவன் என்னை எனக்கு மாமனா மச்சானா என்று போட்டியாளர்கள் பரபரப்பாக வாக்குவாதம் செய்து கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.