கேரளாவில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக வந்துவிட்டு நேரம் முடியும் முன்பே கிளம்புவதாக புகார் வந்தது. இதையடுத்து அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. கடும் எதிர்ப்பையும் மீறி இன்று முதல் அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் அமல்படுத்தப்பட்டது.

கடந்த வாரமே தலைமை செயலாளர் இந்த ஆண்டு, முதல் வேலை நாளில் கேரளாவின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என  உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி இன்று முதல் கேரளா அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தப்பட்டுள்ளது.