எல்.ஐ.சி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.  இந்நிலையில் காலாவதியான இன்சூரன்ஸ் பாலிசிகளை புதுப்பிக்க எல் ஐ சி சிறப்பு பாலிசி புதுப்பித்தல் முகாமை அறிவித்துள்ளது. இதன் மூலம் 5 வருடத்துக்கும் குறைவான பாலிசிகளை மட்டுமே புதுப்பிக்க முடியும்.

பிரீமியம் தாமதக் கட்டணத்தைச் செலுத்தினால் தள்ளுபடியும் வழங்கப்படும். பிப்., 1 முதல் மார்ச் 24 வரை இதற்கான அவகாசம் உள்ளது. எனவே இந்த குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பாலிசியை புதுப்பித்துக் கொள்ளுமாறு LIC அறிவுறுத்தியுள்ளது.