இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் பலராலும் ரசிக்கப்படுகிறது. குழந்தைகள் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களையும் விளையாட்டாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவேற்றம் செய்கின்றனர். தற்போது பெரியவர்களை விட சிறிய பிள்ளைகள் தான் அதிக அளவு தொலைபேசி பார்க்கின்றனர். சில காணொளிகளை பார்த்து குழந்தைகளும் தவறான செயல்களை செய்ய முயற்சிக்கின்றனர்.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று தனது பக்கத்திற்கு வரும் பாம்பை தன்னுடைய இரண்டு கைகளால் பிடித்து இழுத்து விளையாடுகிறது. பாம்பும் எவ்வளவு முயற்சி செய்து தப்பித்தாலும் அதனை ஒரு வழி பார்க்காமல் அந்த சிறுமி விட மாட்டார் போல் உள்ளது. பாம்பை பிடித்ததும் பாம்பின் நாக்கு வெளியில் வருகின்றது. அதனை சிறுமி பிடிக்க முயற்சிக்கிறார். தற்போது இந்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.