தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் நடிகர் விஜயுடன் சேர்ந்து நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில் படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.

குறிப்பாக சிவகார்த்திகேயன் எழுதிய அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி சேர்ந்து பாடிய அரபிக் குத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த பாடல் வெளியாகி தற்போது ஒரு வருடம்‌ நிறைவடைந்த நிலையில், தற்போது அரபிக் குத்துப் பாடலிலிருந்து நீக்கப்பட்ட ஒரு காட்சியை நடிகை பூஜா ஹெக்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நடிகை பூஜா ஹெக்டே அசத்தலாக நடனமாடுகிறார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)