ஹரியானாவின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பல வித்தியாசமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட், பளாசோ பேண்ட்கள் அணியக் கூடாது. நகங்களை நீளமாக வளர்க்கக் கூடாது, மேக் அப் அணியக் கூடாது, அதிக நகைகள் அணியக் கூடாது, செருப்புகள் அணிந்து வரக் கூடாது, முறையாக முடிவெட்ட வேண்டும் என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஒரே அடையாளத்தை கொண்டுவரவும், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை அடையாளம் காண நோயாளிகளுக்கு உதவும் விதமாகவும் புதிய ஆடைக் கட்டுப்பாட்டு கொள்கையை அம்மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.