கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு என்ற இடத்திற்கு அருகே உள்ள பொரசப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் வெற்றிபெற்றனர். பின்னர் மாநில போட்டியிலும் கலந்துகொண்டததற்கு, அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியானது பள்ளியில், தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆசிரியர்கள் ஏழுமலை, சந்தியாகுராஜ், தனசீலி, பாத்திமாமேரி, கித்தேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். மேலும் விளையாட்டு போட்டிகள் மட்டுமின்றி கல்வியிலும் தயார்படுத்திக் கொள்வதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர். மேலும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த பள்ளி முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.