மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் 4-வது காலாண்டில் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற நிதிகளுக்கான வட்டி விகிதத்தை 7.1 சதவீதமாக தொடர முடிவு செய்துள்ளது. இது ஜனவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய காலாண்டில் பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் மார்ச் மாத காலாண்டு வரை 7.1% எந்தெந்த பென்ஷன் திட்டங்களுக்கு கிடைக்கும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி, ஜிபிஎஃப் (மத்திய சேவைகள்), பங்களிப்பு பென்ஷன் நிதி, அகில இந்திய சேவைகள் வருங்கால வைப்பு நிதி, அரசு ரயில்வே வருங்கால வைப்பு நிதி, ஜிபிஎஃப் (பாதுகாப்பு படை சேவைகள்) போன்றவைகளுக்கு வழங்கப்படும். மேலும் the Indian ordnance department provident Fund, the Indian ordnance factories Workmen’s Provident Fund, the Indian novel dockyard Workmen’s Provident Fund, the defence services officers provident fund, the Armed forces personal provident fund போன்ற பென்ஷன் திட்டங்களுக்கும் கிடைக்கும்.