மத்திய அரசின் ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாக போகிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால் தற்போது 38 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படியானது 42 சதவீதமாக உயரும்.

அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்ப்பட்டால் மாத சம்பளம் 18000 வாங்குபவர்களுக்கு அகவிலைப்படி 90,720 ஆக அதிகரிக்கும். இதை தற்போதைய சம்பளத்துடன் ஒப்பிட்டால் ஒவ்வொரு மாதமும் 720 வீதம் ஆண்டுக்கு 8,640 ரூபாய் அதிகரிக்கும். மேலும் இந்த அகவிலைப்படி உயர்வு தொடர்பான ஒப்புதலுக்கு மார்ச் 1-ம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தின் போது ஒப்புதல் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.