கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு புறநகர் தாபஸ் பேட்டையில் தாதா பீர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார். இவருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அடிக்கடி ஆசிரியர் அந்த மாணவியை வெளியே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து ஆசிரியர் மாணவிக்கு தொந்தரவு அளித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.