பண மோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு விரைவு அதிரடிப்படையின் குழு நிறுத்தப்பட்டது. இதனிடையே மருத்துவர்களின் அறிக்கை பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆச்சப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உயர் ரத்த அழுத்தம் 160/100 ஆக இருந்தது என்று ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சருக்கு தீவிர நெஞ்சுவலி இருப்பதால் ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும். தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.