சமீபகாலமாகவே ஹோட்டல்கள் மற்றும் ஆர்டர் செய்யும் உணவுகளில் எலிகள், பூச்சிகள் என பல செத்து கிடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அதன்படி தற்போது உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான் இருந்ததாக வாடிக்கையாளர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

மாம்பழ மில்க் ஷேக் செய்வதற்காக பெண் ஒருவர் பிளிங்கிட்- இல் ஆர்டர் செய்து வாங்கி ஐஸ்கிரீமில் பூரான் இருந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஐஸ்கிரீமில் மனித விரல் கண்டறியப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.