தமிழ்நாட்டில் தொல்குடியியல் புத்தாய்வு ஆய்வு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இந்த திட்டத்தை பழங்குடியினர் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்காக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் தேர்வு பெறும் முதுகலை மாணவர்களுக்கு மாதந்தோறும் 10,000 வீதம் 6 மாதங்களுக்கு உதவி தொகை வழங்கப்படும்.
இதேபோன்று முனைவர் பட்டம் பெரும் மாணவர்களுக்கு மாதம் 25 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு நேற்று முதல் அரசு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது. மேலும் இதற்கான கடைசி தேதி நவம்பர் 30ஆம் தேதி. தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.