
ஆந்திராவில் தற்போது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்கும் நடைமுறையை எளிதாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் விஜயானந்த் ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி whatsapp சேவைகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் whatsapp மூலம் வழங்கப்படும். இதன் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த புதிய முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் சுகாதார அமைப்புகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.