தமிழகத்தில் நடப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை வருகின்ற ஜூன் 25ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டு உள்ள நிலையில் ஜூலை 10ஆம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி துறை அறிவுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு வீட்டிற்கும் தலா  3.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூடுதல் நிதிக்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாக ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகள் அனைத்தும் 360 சதுர அடி அளவில் சமையலறையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட 3 ஆயிரத்து நூறு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.