கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனையில் தமிழக பாஜக சார்பாக பொங்கல் விழா கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகி ஒருவர் தேசப்பற்று தொடர்பாக ஒரு பாடலை மேடையில் பாடினார்.

இதனை கேட்டுக்கொண்டிருந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை திடீரென்று கண்ணீர் விட்டு அழுதார். அதன்பின் கண்களில் வழிந்த நீரை தன் துண்டால் அண்ணாமலை துடைத்துக் கொண்டார். இது தொடர்பான போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.