தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவின்போது திமுகவை சரமாரியாக விமர்சித்தார். சமூக நீதி பேசும் திமுக அரசில் எந்த ஒரு விஷயங்களும் சரி இல்லை எனவும் 2026 ஆம் ஆண்டு கண்டிப்பாக மக்கள் திமுகாவை வீழ்த்துவார்கள் என்றும் கூறினார். அதன்பிறகு நிகழ்ச்சியில் பேசிய விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டில் மன்னராட்சி நடக்கிறது என்றும் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் மன்னர் ஆட்சியை வீழ்த்துவார்கள் என்றும் கண்டிப்பாக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் கூறினார்.
அதோடு விஜய் அரசியல் களத்திற்கு வர வேண்டும் எனவும் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்றும் கூறினார். இதற்கு தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களாட்சி தான் நடைபெறுகிறது. அந்த ஆளுக்கு அறிவில்லையா. மன்னராட்சி ஒன்றியம் நடைபெறவில்லை. இது கூட அவருக்கு தெரியாதா என்று கூறினார். அதன்பிறகு விஜய் குறித்த கேள்விக்கு நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என்று ஒரே வரியில் முடித்துவிட்டார். மேலும் பிறப்பால் இங்கு ஒருவர் முதல்வரானதாக அவர் கூறிய நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் முதல்வராகியுள்ளார் எனவும் அந்த ஆளுக்கு அறிவில்லையா எனவும் உதயநிதி ஸ்டாலின் சொன்னது பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.