நடிகர் சியான் விக்ரம் தமிழ் திரையுலகில் பல வேடங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகிய படம் “பொன்னியின் செல்வன்-2”. அதோடு தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் “தங்கலான்” படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விக்ரமிடம் பிரபல இயக்குனர் கதை ஒன்றை எழுதி அதற்கு நீங்கள் செட் ஆக மாட்டீர்கள் என கூறிய தகவல் வெளிவந்திருக்கிறது.

நடிகர் விக்ரம் டைரக்டர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் “சாமுராய்” படத்தில் நடித்திருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனினும் நடிகர் விக்ரம் அதை வெற்றி படமாக கருதினார். இதன் காரணமாக டைரக்டர் பாலாஜி சக்திவேலுக்கு ஒரு பெரிய வீட்டை ஆபீஸாக மாற்றி கொடுத்து தனக்கு ஒரு கதை எழுத கூறியுள்ளார். கதையை எழுதி முடித்தபின் நேராக சாமி பட ஷூட்டிங்கில் இருந்த விக்ரமை சந்தித்தார். அவரிடம் கதை தயாராகிவிட்டது.

எனினும் நீங்கள் இக்கதைக்கு செட் ஆக மாட்டீங்க. இது சிம்பிளாக இருக்கவேண்டியது என தெரிவித்துள்ளார். இதை நடிகர் விக்ரம் புரிந்துக்கொண்டு இயக்குனர் பதிலை ஏற்றுக்கொண்டார். அந்த கதை சங்கர் தயாரிக்க பரத் மற்றும் சந்தியா நடித்திருந்த “காதல்” படம் ஆகும். இதை இயக்குனர் பாலாஜி பேட்டி ஒன்றில் பகிர்ந்துக்கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.