உத்தர் பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் லிப்டின் பெல்ட் அறுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கரிஷ்மா என்ற பெண் அந்த மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றெடுத்த பிறகு கரிஷ்மா பொது அறைக்கு மாற்றியுள்ளனர். அவர் லிப்டில் சென்ற போது பெல்ட் அறுந்து லிப்ட் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கரிஷ்மாவின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி கரிஷ்மா உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு மருத்துவமனை நிர்வாகம் தான் காரணம் எனக் கூறி அவரது உறவினர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். இதற்கு இடையில் மருத்துவர்களும், ஊழியர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது