பீகாரில் உள்ள பாட்னா நகரில் மத்திய இணை மந்திரி அஸ்வினி சபுபே போலீஸ் பாதுகாப்புடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மத்திய மந்திரியின் பாதுகாப்பு வாகனங்களில் ஒன்று திடீரென மதிலா மற்றும் நாராயணபூர் அருகே திடீரென விபத்து ஏற்பட்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தில் மத்திய மந்திரிக்கு காயம் ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்தின் காரணமாக பகுதியில் பரபரப்பு நிலவிய நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
बक्सर से पटना जाने के क्रम में डुमराव के मठीला-नारायणपुर पथ के सड़की पुल के नहर में कारकेड में चल रही क़ोरानसराय थाने की गाड़ी दुर्घटनाग्रस्त हो गई है। प्रभु श्रीराम की कृपा से सभी कुशल हैं। घायल पुलिसकर्मियों एवं चालक को लेकर डुमराव सदर अस्पताल जा रहा हूं। pic.twitter.com/ybTVi6jn5v
— Ashwini Kr. Choubey(मोदी का परिवार) (@AshwiniKChoubey) January 15, 2023