விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒத்தையால் கிராமத்தில் காளி சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான பணிக்காக தேவையான பொருட்களை வாங்கி ஆட்டோவில் ஏற்றினார். மினி லோடு வேனில் கடப்பா கல், சிங் டேங்க், சிமெண்ட் பை ஆகியவை நிரம்பி இருந்த நிலையில், காளி சாமியின் நான்கு வயது சிறுவன் விஜயதர்ஷன் உட்பட மூன்று சிறுவர்கள் அமர்ந்து சென்றனர். தனியார் பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது, திடீரென வேன் பஸ்சின் பின்பகுதியில் மோதியது.

இந்த விபத்தில் லோடு வேனில் இருந்த கடப்பா கல், சிறுவர்கள் மீது சரிந்தது.  மூன்று சிறுவர்களில், இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், நான்கு வயதான விஜயதர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற சிறுவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. ஆனால், விஜயதர்ஷன் உயிரிழந்த தகவல் அந்த பகுதியினரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.