ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதி சுண்டப்பூர் மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் அந்தோணி ஜெரால்ட் என்பவர் இடைநிலை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று பள்ளிக்கு சென்று வழக்கம் போல அந்தோணி பாடம் நடத்தினார். அதன்பிறகு மதிய உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அந்தோணியை சக ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அந்தோணி மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்தனர். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அந்தோணி ஜெரால்டு இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.