சென்னை ஆர். ஏ புரம் ஸ்ரீ காலனி பகுதியில் சின்னத்திரை நடிகரான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதிஷ் ஆதித்யா(21) என்ற மகன் இருந்துள்ளார். இன்று அதிகாலை 2 மணிக்கு நிதிஷ் ஆதித்யா தனது நண்பர்களான வெங்கட் ஜெயகிருஷ்ணன் ஆகியோருடன் தீபாவளி கொண்டாடியுள்ளார். அதிகாலை 2 மணிக்கு அவர்கள் காரில் வேளச்சேரி தரமணி சாலை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர். இந்த நிலையில் விஜயநகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி சுக்குநூறாக நொறுங்கியது.
இந்த விபத்தில் நித்திஷ் ஆதித்யா சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். ஜெய் கிருஷ்ணன் வெங்கட் ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிதிஷ் ஆதித்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.