
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் பரந்தூர் சென்று பொது மக்களை சந்தித்தார். அதாவது பரந்தூரில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய விமான நிலையம் அமைய இருக்கும் நிலையில் அதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒப்புதல் கொடுத்துள்ளது. ஆனால் பரந்தூர் ஏகநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 18 கிராம மக்கள் விமான நிலையம் வந்தால் விளைநிலங்கள் குடியிருப்புகள் போன்றவைகள் அழியும் என்பதால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த மக்களை நேரில் சென்று சந்தித்த விஜய் பரந்தூரில் விமான நிலையம் அமையாது என்று உறுதி கொடுத்ததோடு சட்டப்படி அதற்கு அனைத்து போராட்டங்களையும் முன்னெடுப்போம் என்றும் விவசாய நிலங்கள் அழியாத வேறு இடத்தில் விமான நிலையத்தை அமைத்துக் கொள்ளுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார். அதோடு திமுக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையத்தை தாண்டி வேறு ஏதோ லாபம் இருப்பதாகவும் விஜய் கடுமையாக விமர்சித்தார்.
நடிகர் விஜயின் பரந்தூர் பயணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை எடுத்துள்ள நிலையில் தற்போது வேங்கை வயல் செல்ல இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தன்னுடைய முதல் அரசியல் களப்பயணத்தை பரந்தூரிலிருந்து தொடங்கியதாக விஜய் கூறிய நிலையில் அடுத்ததாக வேங்கைவையில் செல்கிறார். வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கழிந்து கிட்டத்தட்ட 2 வருடங்களாகியும் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த தண்ணீரை குடித்த ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் கிட்டத்தட்ட 2 வருடங்களாகியும் வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. மேலும் இந்த சூழலில் தற்போது விஜய் வேங்கைவயல் செல்ல இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.