ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதாரித்து பாஜக பிரச்சாரம் செய்யும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80 பேருடைய வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து வேட்புமனு ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை, 13வது சட்ட திருத்தம் தொடர்பாக தான் இலங்கை செல்கிறேன். இதனால், இன்று நடைபெறும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பாஜக சார்பில் சிபி ராதாகிருஷ்ணன் பங்கேற்பார். வரும் நாட்களில் வேட்பாளர் தென்னரசுவை ஆதாரித்து தனது பிரச்சாரத்தை தொடங்குவேன் என கூறினார்.