கூட்டணி தொடர்பாக அதிமுகவில் இரண்டு கட்ட பேச்சு வார்த்தைகள் முடிந்துள்ளன. அதனைப் போலவே பாஜகவின் முக்கிய தலைவர்களும் என்னை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர், 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான இலக்கை முன்வைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும் நெல்லை தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என கட்சித் தொண்டர்கள் ஆசைப்படுகின்றனர் எனவும் கூறினார்.