உயர் ஓய்வூதிய திட்டத்தின் வாயிலாக பயன்பெற நினைப்பவர்கள் ஜூன் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அவகாசம் இருக்கிறது. அதன்படி, உங்களது கணக்கில் அதிகமான பணம் மற்றும் அதிக ஓய்வூதியம் பெறவேண்டுமானால் இதற்காக விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே இருக்கிறது. இதில் இதுவரையிலும் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். இது தொடர்பாக தகவல் அளித்த இபிஎஃப்ஓ, அதன் ஊழியர்கள் எவ்விதமான பிரச்சனையையும் சந்திக்காமல் இருக்கும் வண்ணம் வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.

இதனால் உயர் ஓய்வூதிய திட்டத்தை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் அதிக ஓய்வூதிய விருப்பத்தை தேர்ந்தெடுத்தால் பணி ஓய்வுக்கு பிறகு பெறப்படும் மொத்த தொகையில் அளவு குறையக்கூடும். எனினும் உங்களது மாதாந்திர ஓய்வூதியம் அதிகரிக்கும். இத்திட்டத்தில் நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டும் இருக்கிறது என நிபுணர்கள் நம்புகின்றனர்.