தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதில் தொண்டை வலி, சளி பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் மற்றும் ரோஸ்மில்க்  ஆகியவற்றை கொடுக்க வேண்டாம். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், ஒ ஆர் எஸ் இளநீர் , மோர் அதிகம் குடிக்கவும், மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.