எதிர்க்கட்சியினரின் மனதில் இருப்பதை தான் இங்கு செயலாக வெளிப்படுத்துகின்றனர் என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டடினார்..
மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிப்பதுடன் அவருக்கு வாழ்த்தும் தெரிவிக்கிறேன். நாடாளுமன்ற பேச்சு மூலம் பழங்குடியினர் சமுதாயத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் குடியரசுத் தலைவர். தொலைநோக்கி சிந்தனையுடன் குடியரசுத் தலைவர் உரையை வழங்கியிருக்கிறார். குடியரசுத் தலைவர் உரை நாட்டுக்கு வழிகாட்டும் வகையில் உள்ளது என்றார்.
மேலும் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குடியரசுத் தலைவரை அவமானம் செய்தார். காங்கிரஸ் கட்சியினர் செய்த வினைகள் அவர்களை சுடும். எதிர்க்கட்சியினரின் மனதில் இருப்பதை தான் இங்கு செயலாக வெளிப்படுத்துகின்றனர். ஊடகங்களில் வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக அவரவர் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். நாடாளுமன்றத்தில் சிலரது (ராகுல் காந்தி) பேச்சால் அவர்களது ஆதரவாளர்கள் பெருமகிழ்ச்சி அடைந்து இருப்பதாக பிரதமர் விமர்சித்தார். உள்மனதில் இருந்த வெறுப்பு அவர்களது பேச்சு மூலம் வெளிப்பட்டிருப்பதாக ராகுல் குறித்து பிரதமர் மோடி விமர்சித்தார். அதாவது, இல்லாத விஷயத்தை ராகுல் காந்தி பேசி இருப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்..
இதனிடையே பிரதமரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்ற தொடங்கியபோது அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். அதானி விவகாரம் குறித்து கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட கோரி எதிர் கட்சிகள் முழக்கம் எழுப்பி வெளிநடப்பு செய்தது..