திருச்சி எஸ் பி அருண்குமார் நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம். நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம். நானும் எனது குடும்பத்தாரும் இணையதள தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என குற்றம் சாட்டினார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது . திருச்சி எஸ் பி வருண் குமாரின் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் மீது தமிழக டிஜிபி சங்கர் ஜுவாலிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் பல்லடத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டிற்கு நாம் தமிழர் கட்சி தேவை. ஐபிஎஸ் அதிகாரி அருண் குமார் பேசியதை சீமான் பெரிதுபடுத்த வேண்டாம் என ஆதரவாக பேசியுள்ளார்.இந்த நிலையில் சீமான் பேசும்போது தம்பி அண்ணாமலையின் பேச்சில் முதிர்ச்சி தெரிவதாக எல்லாரும் சொல்கின்றனர். வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன் எனக் கூறியுள்ளார்.

மற்றொருபுறம் அண்ணாமலை பேசும்போது அப்பப்ப கண்ணாடியை பார்க்கணும். ஒரு விஷயத்தை பெட்டரா பண்ண யோசிக்கணும். நம்மளும் முதிர்ச்சியை காட்ட வேண்டும் என கூறியுள்ளார். அண்ணாமலை சீமானை அண்ணன் என கூறிய நிலையில் தற்போது சீமானும் அண்ணாமலையை தம்பி என கூறியுள்ளார். இவர்களது அண்ணன் தம்பி உறவு தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.