அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக சக்கைபோடு போட்டு வருகிறது. இரண்டு படங்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.  வாரிசு, துணிவு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.

ஆரம்பம் முதலே துணிவு வசூல் நிலவரம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், வாரிசு வசூல் நிலவரம் குறித்து அவ்வப்போது அறிவிப்பு வெளியானது. அதன்படி, வாரிசு தற்போது உலக அளவில் ரூ.300 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.