3 பைக்குகளில் 14 நபர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உத்தரபிரதேசம் பரேலியில் பைக்குகளில் சிலர் சாகசப் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் 14 பேர் 3 பைக்குகளில் செல்கின்றனர். 1 பைக்கில் 6 பேர் மற்றும் மற்ற இரண்டு பைக்குகளில் தலா 4 பேர் செல்கிறார்கள். இச்சம்பவம் பரேலியின் தியோரானியா பகுதியில் அரேங்கேறியுள்ளது.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து காவல்துறையினர் அந்த பைக்குகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மூத்த பரேலி காவல்துறை அதிகாரி அகிலேஷ் குமார் சௌராசியா கூறியதாவது “தகவல் கிடைத்ததும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என அவர் கூறினார்.