பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் சினிமாவில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் இத்தாலியில் ரோமானிய பெரிய நகை கடையான பல்கிரியின் 140 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நகைக்கடை வாட்ச் மற்றும் தோல் பொருட்கள் போன்றவைகளுக்கும் பிரபலமானது. இந்த விழாவின்போது அந்தக் கடையின் மிக விலை உயர்ந்த ஆபரணமான Aeterna வெளியிடப்பட்டது.
இந்த விழாவில் பல்கேரிய நகைகடையின் உலகளாவிய தூதரான பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். இந்த விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த நெக்லஸ் 140 கேரட் மதிப்பிலான வைர நெக்லஸ் ஆகும். இதன் விலை மட்டும் சுமார் ரூ. 358 கோடி ஆகும். இந்த வைர நெக்லஸ் பல்கேரிய நகைக்கடையின் மிக உயர்ந்த ஆபரணங்களில் ஒன்றாகும். மேலும் இந்த நெக்லஸை செய்து முடிக்க 2800 மணி நேரங்கள் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.