தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக ரத்னம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் விஷாலுக்கு தற்போது 46 வயது ஆகும் நிலையில் அவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாததால் அவருடைய திருமண அறிவிப்பு குறித்த எதிர்பார்ப்பு அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஷால் எப்போது திருமணம் செய்து கொள்வேன் என்பது குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, நான் தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களில் நடித்த பிறகுதான் திருமணத்தைப் பற்றி யோசிப்பேன். ஆனால் அதே சமயம் நடிகர்கள் சல்மான்கான், சிம்பு மற்றும் பிரபாஸ் ஆகியோர்கள் திருமணம் செய்து கொண்டால் தான் நானும் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் விஷால் திருமணம் குறித்து பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.