ராஜஸ்தான் மாநிலத்தில் புஷ்கர் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவின்போது ஒரு எருமை மாடு பல கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையானது பேசும் பொருளாக மாறி உள்ளது. அதாவது ஒரு எருமை மாடு கிட்டத்தட்ட 23 கோடி வரையில் விற்பனையாகியுள்ளது. இந்த மாடு 5 அடி உயரம் மற்றும் 13 அடி நீளம் கொண்டது.
இதன் எடை மட்டும் சுமார் 1500 கிலோ. இதன் பெயர் அன்மோல். இதற்கு 8 வயது ஆகும் நிலையில் ஜக்தர் சிங் என்பவர் இதனை வளர்த்து வருகிறார். இந்த எருமையின் விந்து மூலமாக அவர் பல லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். மேலும் அந்த எருமை மாட்டை பிள்ளை போன்று வளர்ப்பதாக கூறிய அவர் ஏலத்தில் பல கோடி ரூபாய் வரையில் விற்பனையான நிலையிலும் அதனை கொடுக்க அவர் மறுத்துவிட்டார்.