உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் கவனக்குறைவால் இருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பசாய் என்ற கிராமத்தில் உபேந்திரா (22), சிவம் (23) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு உணவு ஸ்டாலை நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அடுப்பில் வைத்து கொண்டைகடலை சமைத்த நிலையில் மறந்து போய் அடுப்பை அணைக்காமல் விட்டுவிட்டனர்.

அந்த கொண்டைக்கடலை தொடர்ந்து அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்ததால் புகையால் ரூம் முழுவதும் நிரம்பிய நிலையில் அரை மூடப்பட்டிருந்ததால் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தது. அப்போது கார்பன் மோனாக்சைடு புகையால் அவர்கள் மூச்சுத்திணறி தூக்கத்தில் உயிரிழந்து விட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.