புதுக்கோட்டையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் மீது புகார் அளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவருடைய கார் டிரைவர் கைது செய்யப்பட்ட நிலையில் சுந்தரபாண்டியன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே திமுகவை சேர்ந்த ஜாபர் சாதிக், ராமநாதபுரம் இப்ராஹிம் உள்ளிட்டோர் போதை பொருள் வழக்கில் சிக்கி கைதாகி இருக்கும் நிலையில் அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் சிக்கலில் சிக்கி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.