கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 2016 முதல் 2021 வரை எம்எல்ஏவாக இருந்த அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் 5 மணி நேரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் போலீசார் சோதனை நடத்திய நிலையில் அடுத்தடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.