
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கார்த்திக் குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்க்கும் நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக உஷா (23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஜெயவந்த் என்ற ஆண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது உஷா 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதில் கார்த்திக் குமார் தீபாவளி சீட்டு நடத்தி வந்த நிலையில் அவருக்கு அதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த தீபாவளி பண்டிகையின் போது சீட்டு கட்டியவர்களுக்கு பொருட்கள் எதுவும் வழங்கவில்லை.
இதன் காரணமாக சீட்டு பணம் போட்டவர்கள் தொடர்ந்து கார்த்தி குமாரிடம் பணம் கேட்டுள்ளனர். இதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தவறாக ஏற்பட்டுள்ளது. இதேபோன்று நேற்று முன்தினமும் பணத்தை கேட்டு சிலர் கார்த்திக் குமார் வீட்டிற்கு வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக மனம் உடைந்த உஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் திருமணம் ஆகி 2 வருடங்கள் தான் ஆவதால் துணை கலெக்டரும் விசாரணை மேற்கொள்கிறார்.