தமிழகத்தின் சிறந்த காவல்நிலையமாக திருப்பூர் வடக்கு காவல்நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வழக்குகளை விரைந்து முடிப்பது, புகார் கொடுக்க வருபவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வது, உள்ளிட்டவைகளை வைத்து ஏடிஜிபி தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதில், திருப்பூர் வடக்கு காவல்நிலையம் முதல் இடத்தையும், திருச்சியில் உள்ள கோட்டை காவல்நிலையம், திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குமரன் சாலையில் இயங்கி வருகிறது திருப்பூர் வடக்கு காவல் நிலையம். இந்த காவல் நிலையம் மாநகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி புகார்களின் வரத்து அதிகமாக இருக்கக்கூடிய ஒரு காவல் நிலையம் ஆகும். என்பது குறிப்பிடத்தக்கது.