திருநெல்வேலியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஜனவரி 2ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். இதனையடுத்து அவர் இன்று அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் அளித்த  அதே மனு சாக்கடையில் கிடந்துள்ளது.  தான் கொடுத்த மனுவின் மீது நடவடிக்கை ஏதும் இல்லாத நிலையில் அது குப்பையில் கிடந்தததை கண்டு மணிகண்டன் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

பின்னர் அவர் அந்த மனுவை ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் கொண்டு சென்று  ஏன் இந்த மனுவை குப்பையில் போட்டுள்ளீர்கள்? என்னுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்று முறையிட்டுள்ளார். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை என்று கூறப்படுகிறது.