டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்கராய் ஜனதா கட்சி’ மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், கூட்டத்தைக் கலைக்க ரயில்வே பாதுகாப்புப் படையினர்  லேசான தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் திடீரென நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அப்போது, கூட்டத்திலிருந்து திடீரென முன்னேறி வந்த ஒரு இளைஞர், RPF வீரர்களுக்கு முன்பாக நின்றுகொண்டு “என்னை அடியுங்கள், அடிப்பதாக இருந்தால் அடியுங்கள்!” என்று ஆவேசமாகக் கத்தியபடி நின்ற காட்சி அங்கிருந்தவர்களை உரைய வைத்தது.

அந்த வாலிபர் மீது பாதுகாப்புப் படையினர் லத்தியால் அடித்தபோதிலும், அவர் அங்கிருந்து நகர மறுத்து தொடர்ந்து வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நிலைமையைக் கட்டுப்படுத்த வந்த பெண் RPF அதிகாரி ஒருவர் அவரை ஓரமாக அழைத்துச் செல்ல முயன்றார். பிற வீரர்களும் அவரைக் மேலும் அடிக்காமல், தள்ளிவிட்டுப் பின்வாங்கச் செய்தனர். இருப்பினும், அந்த இளைஞரின் ஆத்திரம் தணியவில்லை. நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களால் இளைஞர்களிடையே அதிகரித்துள்ள கொந்தளிப்பையும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவர்களின் ஆதங்கத்தையுமே இந்த வீடியோ படம் பிடித்துக் காட்டுகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by NDTV India (@ndtvindia)

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜந்தர் மந்தருக்கு நேரில் வந்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். சமாஜ்வாதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்காகப் பேரணியும் நடத்தினர். இச்சம்பவம் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டு, அவை நடவடிக்கைகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரிலிருந்து சன்சத் மார்க் பகுதியை நோக்கி முன்னேறியுள்ளனர். நிலைமை கைமீறிச் செல்வத உணர்ந்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, கரப்பான் பூச்சி கட்சி அமைப்பின் முக்கிய தலைவர்களைத் தனது இல்லத்திற்கு வரவழைத்து சுமார் 10 நிமிடங்கள் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.