செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவருமான, சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் ஆய்வு பயணத்தை மேற்கொண்டது. இந்த ஆய்வு பயணத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாநகரத்தின் உடைய ஆணையர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், காவல் கண்காணிப்பாளர், காவல்துறை துணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரி பெருமக்களோடு பல்வேறு கள ஆய்வுகளை குழு ஆய்வு செய்தது.

அந்த அடிப்படையில் இந்த தாமிரபரணி ஆற்றின் ஒரு பகுதியாக இருக்கிற மேலப்பாளையம் கால்வாய் முற்றுகையிடமாக அது பழுதடைந்து… ஆகாயத்தாமரைகள் படர்ந்து… நகராட்சியின் உடைய குப்பை கழிவுகளால் மூடப்பட்டிருக்கிறது. அது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்…  தூர்வாரப்பட வேண்டும் என்று குழு பரிந்துரை செய்தது.  தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அந்த பணியை தொடங்கி இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே மாதிரி திருநெல்வேலி மாவட்டத்தில் ஆயுத படைக்கு… ஆயுதங்களை பாதுகாத்து வைக்கின்ற அறையுடன் கூடிய நிர்வாகக் கட்டிடம்.  7.50 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. அந்த இடத்தை குழு நேரடியாக சென்று ஆய்வு செய்து அதில் ஜன்னல்கள் மற்றும் அந்த ஆய்வக கிடங்கின் பாதுகாப்பு அறையில் இருக்கக்கூடிய சின்ன குளறுபடிகளை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று குழு உத்தரவிட்டிருக்கிறது.

அதேபோன்று திருநெல்வேலி மாவட்ட தினசரி 2000 பேர் உள் நோயாளிகளும், 4000 புற நோய்களும் வருகின்றனர். நமது மருத்துவ கல்லூரி மருத்துவமனை… சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை சென்று குழு ஆய்வு செய்தது. அங்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஆஞ்சியோ கிராம், ஆஞ்சியோ பிளாஸ்ட் போன்ற  மிகச் சிறந்த மருத்துவர்கள் கொண்டு மூன்று வேலையும் அந்தப் பணிகள் தமிழ்நாட்டிலே இந்த மருத்துவ கல்லூரியில் தான் நடைபெற்ற வருவதாக கல்லூரி முதல்வர் அவர்கள் தெரிவித்திருக்கிறார், மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களும் அதை உறுதி செய்தார்.

ஆப்ரேஷன் தியேட்டர் என்று சொல்லக்கூடிய அறுவை சிகிச்சை அரங்கு  மிக நீட்டா… கிளினா  தனியார் மருத்துவமனைக்கு நிகராக பராமரிக்கப்பட்டு வருவதையும், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு குடிநீர் வசதி செய்து தருவது குறித்தும்,  ஏனைய உபகரணங்கள் வழங்குவதை குறித்தும்,  பழைய மருத்துவ கல்லூரி வளாகத்திற்கு சென்று வருவதற்கு பேட்டரி கார் வழங்கப்பட வேண்டிய உரிமைகள்  குறித்தும் குழு நேரடியாக ஆய்வு செய்தது.

குழு முன் டீன்னும், ஆரம் அவர்களும்.  சூப்பரண்ட் அவர்களும் ஆஜராகி அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டிறுப்பதை பற்றி சான்று ஆவணங்களை அளித்து,  அந்த உறுதிமொழி செய்யப்பட்டிருப்பதையும் உறுதி செய்தது.  மேலும் சிறப்பாக நிர்வகித்து வருகிற கல்லூரி முதல்வர் அவர்களை இதே நிலையில் அதை நிர்வகித்து வரவேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. அந்த கட்டிடத்தை பராமரிக்கின்ற பொதுப்  பணித்துறை அதிகாரிகள் சில இடங்களில் ஒட்டடைகள் போன்ற… அந்த பூச்சிகள் போன்ற இருக்கிறது….  அதை எல்லாம் முழுமையாக சரி செய்து தர வேண்டும் என்று குழு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது என தெரிவித்தார்.