சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மோசடியாக உங்கள் அக்கவுண்ட்டில் பணம் செலுத்தப்பட்டுவிட்டது என்று மெசேஜ் வருகிறது. அதோடு ‘மேலும் தகவல்களுக்கு’ என்று ஒரு லிங்க் வருகிறது. அந்த லிங்கை க்ளிக் செய்தால் உங்கள் பணம் உள்ளிட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. டிஜிட்டல் முறையில் கொள்ளை அடிக்கும் கும்பலின் நவீன திருட்டு முறைதான் யூடியூப் மூலம் லைக் செய்ய சொல்லி ஏமாற்றுவது. உங்களுக்கு வாட்சாப்-இல் பகுதி நேர பணி பற்றி ஒரு மெசேஜ் வரும். அதற்கு பதில் அளித்தால் யூடியூபில் லைக்/சப்ஸ்க்ரைப் செய்தாலே பணம் தருகிறோம் என்பார்கள். அவர்களை சொல்வதை எல்லாம் கேட்கத் தொடங்கினால் உங்களிடம் இருந்து லட்சக் கணக்கில் பணம் பறிபோகும். அவற்றுக்கு பதிலளிக்காமல் விட்டுவிடுங்கள்.