கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 5,102 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு இருந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது

இந்நிலையில் கர்நாடகாவில் இன்று வரை ₹83.42 கோடி கணக்கில் வராத பணம், ₹57.13 கோடி மதிப்பிலான15 லிட்டர் மதுபானங்கள், ₹16.55 கோடி மதிப்பிலான 1176.92 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன – தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.