தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒருவர், ஒரு பெரிய கரடியை சிறிய ஸ்பூனில் உணவூட்டி, அதை முத்தமிட்டு ஹை-ஃபை கொடுக்கிறார். ‘Nature is Amazing’ என்ற X பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, 2.9 லட்சம் பார்வைகளைத் தாண்டி, நெட்டிசன்களில் வியப்பையும் அதே சமயம் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.

 

ரஷிய மொழியில் பேசும் அந்த நபர், இந்த பெரிய கரடியிடம் மிகவும் இயல்பாக பழகுவது சமூக வலைதளங்களில் பல்வேறு கலந்துரையாடல்களுக்கு காரணமாகியுள்ளது. சிலர் இதைப் பாசமிகுந்ததாக பாராட்டினாலும், பலர் இது மிகவும் அபாயகரமான நடத்தை என்றும், இவ்வகை வீடியோக்கள் வனவிலங்குகளை சீரழிக்கும் தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர்.