தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த 2021-ம் ஆண்டு மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். நடிகர் விவேக்கின் மரணம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் நடிகர் விவேக்கின் காமெடி வீடியோ ஒன்றினை தற்போது தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு விவேக் சார் உங்களை நாங்கள் ரொம்ப மிஸ் பண்றோம். திரை உலகிற்கு உங்கள் மறைவு மிகப்பெரிய இழப்பு என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஏ.ஆர் ரகுமானின் உருக்கமான பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.